மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் மனு!

Share on

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுமீதான விசாரணையை ஜனவரி 23ந் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

புதிய அணை கட்ட சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்க ஒப்புதல் வழங்கிய மத்திய நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்குமாறும் கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கியது.

இந்நிலையில், மத்திய அரசின் ஒப்புதலை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடக அரசு தரப்பிலும் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்வதற்கு கர்நாடகா கால அவகாசம் கோரியதை ஏற்றுக் கெர்ண்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 23ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *