சிவகங்கையில் ஒரே மேடையில் 15 பேர் உலக சாதனை முயற்சி : ஐஸ் கட்டியில் 1¾ மணி நேரம் யோகாசனம் செய்து சாதனை

சிவகங்கையில் சோழன் உலக சாதனை புத்தக அமைப்பின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி 18 உலக சாதனைகள் ஒரே மேடையில் நிகழ்த்தப்பட்டன. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். சோழன் உலக சாதனை புத்தக அறக்கட்டளை நிறுவனர் நிமலன் வரவேற்று பேசினார். விழாவில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட இயக்குனர் அருண்மணி மற்றும் சிவகங்கை இளைய மன்னர் மகேஷ்துரை, ரமணவிகாஷ் பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் தங்கதுரை, தொழில் அதிபர் மகேந்திரன் மற்றும் ரஷ்யாவில் உள்ள சர்வதேச யோக நித்தி மையம் நிறுவனர் டாக்டர் முருகதாஸ் தலைமையிலான 8 பேர் கொண்ட யோகா குழுவினரும் கலந்துகொண்டனர். பின்னர் நடந்த உலக சாதனை நிகழ்ச்சியில் 6 வயது சிறுவன் முதல் 42 வயது பெரியவர் வரை என 15 பேர் பல்வேறு சாகசங்களை செய்து உலக சாதனை படைத்தனர். அதில் 18 உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. ரஷியாவை சேர்ந்த சர்வதேச யோக நித்தி மையம் நிறுவனர் டாக்டர் முருகதாஸ் (வயது 42) ஐஸ் கட்டிகளின் மீது 1¾ மணி நேரம் அமர்ந்தபடி யோகாசனம் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *