Amitabh Bachchan

விவசாயிகளின் கடன்களை திருப்பிச் செலுத்தும் அமிதாப் பச்சன்!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சுமார் 850 விவசாயிகளின் வங்கி கடன்களை திருப்பி செலுத்துகிறார்.

விவசாசம் தான் நாட்டின் முதுகெலும்பு என்ற நிலையில், விவசாயிகள் கடன் பிரச்சனைகளால் தவித்து வருகின்றனர். பருவ நிலை மாற்றங்களால் முக்கியமாக பாதிக்கப்படுவது விவசாயிகள் தான். இதனால், மனமுடைந்து தற்கொலை செய்யும் அளவிற்கு கூட விவசாயிகள் சென்றுள்ளனர். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதற்கு இவர்கள் நம்பியிருப்பது, விவசாயத்தை மட்டுமே.

இந்த நிலையில், உத்திர பிரதேசத்தில் 850 விவசாயிகளின் வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்துவதாக நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்திருக்கிறார். முன்னதாக,அமிதாப் பச்சன் மகாராஷ்ட்ரா, ஆந்திராவில் வங்கிக் கடன் வாங்கி, அதனை திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்த 350 விவசாயிகளின் கடன்களை திருப்பிச் செலுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக நடிகர் அமிதாப் பச்சன் கூறியிருப்பதாவது: ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சுமார் 350 விவசாயிகள் தங்களது வங்கி கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வந்தனர்.அவர்களை தற்கொலை செய்யும் அளவிற்கு இருந்த நிலையில், அவர்களின் துயரத்தை துடைக்கும் வகையில்ல் வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்தினேன். தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்த இயலாத நிலையில் உள்ள 850 விவசாயிகளின், வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த இருக்கிறேன். 850 விவசாயிகளின் கடனானது, சுமார் ரூ.5,5 கோடியாகும். விவசாயிகளுக்கு இவ்வாறு உதவி செய்வது மனநிறைவை தருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

சினிமா துறையில் கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் மற்ற நடிகர்களும். அமிதாப் பச்சனை பின்பற்றி விவசாயிகளுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும். சிறு தொகையாக இருந்தாலும், சிறு விவசாயிகளைப் பொறுத்த வரையில் அது பெரிய தொகை தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *