விடுமுறை முடிந்து ஊருக்கு திரும்பிய பயணிகள் அவதி !

சரஸ்வதிபூஜையை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு வந்தவர்கள், சென்னை திரும்ப புறப்பட்டதால் நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

செங்கோட்டையில் இருந்து சென்னைக்குச் செல்லும் பொதிகை விரைவு ரயிலில் ஏற கடையம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், புளியங்குடி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பயணிகள் திரண்டனர்.

முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் நிரம்பி வழிந்த நிலையில் முன்பதிவு பதிவு இல்லாத பெட்டிகளில் ஏற கடும் கூட்ட நெரிசல் நிலவியது.

கூட்டத்தை எதிர்கொள்ள ரயில்வே போலீசார் பயணிகளை வரிசையில் ஏற அனுமதித்தனர்.

தென்காசியிலும் இதே நிலையே நீடித்தது. விழாக்காலங்களில் கூடுதல் ரயில்களை இயக்க தென்மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர், அப்துல் சலாம்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *