செந்துறை அருகே சுண்ணாம்புக்கல் சுரங்கம் சரிந்து ஆபரேட்டர் பலி!

Share on

செந்துறை:அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தில் தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் அனுபவமில்லாத ஆபரேட்டர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்தநிலையில் திருமானூர் அருகே உள்ள பெரிய பட்டாக்காடு கிராமத்தைச் சேர்ந்த சுப்பையன் மகன் வினோன்மணி (வயது 24) என்பவர் ஹிட்டாச்சி எந்திரத்தின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். பாதுகாப்பற்ற முறையில் தோண்டப்பட்டு வந்த இந்த சுரங்கத்தில் நேற்று முன்தினம் இரவு வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென சுரங்கம் சரிந்து ஹிட்டாச்சி எந்திரத்தை மூடியது. இதுகுறித்து தகவலறிந்து மைன்ஸ் மேனேஜர் முரளி அங்குள்ள ஊழியர்கள் மூலம் மற்றொரு ஹிட்டாச்சி எந்திரத்தை கொண்டு வந்து மண்ணைத் தோண்டி மண்ணிற்குள் புதைந்த ஹிட்டாச்சி எந்திரம் மற்றும் ஓட்டுநரை மீட்டனர்

அதன் பின்னர் வினோன் மணியனை அரியலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். அதனைத்தொடர்ந்து அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வினோமணியின் உறவினர் மனோகரன் இரும்புலிக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் முதல்முறையாக ஹிட்டாச்சி டிரைவர் ஒருவர் சுரங்க விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சிமெண்ட் நிறுவனங்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *