தஞ்சாவூரில், ஊட்டச்சத்து வழங்கும் சிறுதானிய ஐஸ்கிரீம்.!

Share on

தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகமானது சிறுதானியங்களால் ஆன ஐஸ்கிரீமைக் தயாரித்துள்ளது.

மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஆராய்ச்சி நிறுவனமான இந்திய உணவு பதன தொழில்நுட்பக்கழகம் தஞ்சாவூரில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் சி. அனந்தராமகிருஷ்ணன் தலைமையில் பணியாற்றிய குழுவானது தேசிய ஊட்டச்சத்து பாதுகாப்பை மையமாகக் கொண்டு பல புதிய உணவுப் பொருட்களை கண்டுபிடித்து வருகிறது. அவற்றுள் ஒன்று தான் சிறுதானியங்களினால் செய்யப்படும் ஐஸ்கிரீம்.

இந்த ஐஸ் கிரீம், சிறுதானிய விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருப்பதோடு, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான ஊட்டச்சத்தை வழங்கும் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு சொட்டு கூட பால் சேர்க்கப்படாமல் சிறுதானிய ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. மூளை வளர்ச்சிக்கு தேவையான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களால் செறிவூட்டப்பட்டுள்ளது. இந்த ஐஸ்கிரீமை சாப்பிடுவோருக்கு நார்ச்சத்தினை அளிக்கும் வகையில் பலாப் பழத்தினால் ஆன கோன்களை தயாரிக்கும் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. ஐஸ்கிரீம் தயாரிப்பு தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளதால், சிறுதானியங்கள் குறித்து தகவல்கள் ரகசியம் காக்கப்படுகின்றன.

செய்தியாளர், அப்துல் சலாம்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *