இயற்கை வள பாதுகாப்பை வலியுறுத்தி கோவில்பட்டியில் மினி மாரத்தான் போட்டி.

Share on

இயற்கை வள பாதுகாப்பை வலியுறுத்தி கோவில்பட்டியில் மினி மாரத்தான் போட்டி

இயற்கை வள பாதுகாப்பை வலியுறுத்தி கோவில்பட்டியில் 2-ம் ஆண்டு மினி மாரத்தான் போட்டி நடந்தது.

கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் எம்.ஜெபராஜ், மார்க்சிஸ்ட் நகர செயலாளர் எல்.பி.ஜோதிபாசு ஆகியோர் தலைமை வகித்தனர்.

போட்டிகள் 13 வயது வரையும், 14 வயது முதல் 17 வயது வரையும், 18 வயதுக்கு மேல் என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் 13 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கு 2 கி.மீ. தூரமும், 17 வயதுக்கு உட்பட்டோருக்கு 4 கி.மீ. தூரமும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 6 கி.மீ. தூரமும், பெண்களுக்கான 13 வயதுக்கு உட்பட்டோருக்கு 2 கி.மீ. தூரமும், மற்ற பிரிவுகளுக்கு 3 கி.மீ. தூரமும் போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில், 13 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் பூவரசன் முதலிடம், முத்துஇசக்கி 2-ம் இடமும், மாதவன் 3-வது இடமும் பிடித்தனர். 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ரூபன் இசக்கி முதலிடமும், குரு எத்திராஜ் 2-ம் இடமும், கார்த்திக்ராஜ் 3-வது இடமும் பிடித்தனர். 18 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் அருண் முதலிடமும், வெங்கடேஷ் 2-ம் இடமும், செல்வராஜ் 3-ம் இடமும் பிடித்தனர்.

பெண்களுக்கான 13 வயதுக்குட்டோர் போட்டியில் தைரியலட்சுமி முதலிடமும், கனகலட்சுமி 2-ம் இடமும், சுதாலட்சுமி 3-ம் இடமும் பிடித்தனர். 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கலைச்செல்வி முதலிடமும், மாரிச்செல்வி 2-ம் இடமும், ஐஸ்வர்யா 3-ம் இடமும் பிடித்தனர். 18 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் ஜெயபாரதி முதலிடமும், மீனாட்சி 2-ம் இடமும், கார்த்திகா ராணி 3-ம் இடமும் பிடித்தனர்.

போட்டிகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, மருத்துவர் எஸ்.தாமோதரன், வனச்சரகர் எஸ்.சிவராம், திருநெல்வேலி கல்லூரி கல்வித்துறை துணை இயக்குநர் எல்.மயிலம்மாள், அதிமுக பிரமுகர் எஸ்.வேல்செல்வி ஆகியோர் தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *