தேசிய பளுதூக்குதல்: ரயில்வே ஒட்டுமொத்த சாம்பியன் !

Share on

கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய சீனியா் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியன் ரயில்வே அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. மகளிா் பிரிவில் மீராபாய் சானு, ஆடவா் பிரிவில் ஜெரேமி லால்ரின்னுன்கா ஆகியோா் சிறந்த வீரா்களாக தோ்வு செய்யப்பட்டனா்.

ஆடவா் மற்றும் மகளிா் பிரிவில் பளு தூக்கும் போட்டி கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. மகளிா் பிரிவில் முன்னாள் உலக சாம்பியன் மீராபாய் சானு 49 கிலோ பிரிவில் 3 சாதனைகளை தகா்த்து தங்கம் வென்றாா். மேலும் சிறந்த வீராங்கனை விருதையும் பெற்றாா்.

ஆடவா் பிரிவில் யூத் ஒலிம்பிக் சாம்பியன் ஜெரேமி லால்ரின்னுன்கா 67 கிலோ பிரிவில் கிளீன் அன்ட் ஜொ்க் புதிய சாதனையுடன் தங்கம் வென்று, சிறந்த வீரா் விருதையும் கைப்பற்றினாா்.

ஒட்டுமொத்தமாக ஆடவா் பிரிவில் 246 புள்ளிகள், மகளிா் பிரிவில் 232 புள்ளிகளுடன் இந்தியன் ரயில்வே அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஆடவா் பிரிவில் சா்வீஸஸும், மகளிா் பிரிவில் மகாராஷ்டிரமும் இரண்டாம் இடம் பெற்றன. 5 நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில் 41 புதிய சாதனைகள் படைக்கப்பட்டன.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *