அருப்புக்கோட்டையும் அமெரிக்காவின் நாசாவும்!

Share on

அருப்புக்கோட்டையும் அமெரிக்காவின் நாசாவும்…

பெரிய மாநகரங்களில் மிகப்பெரிய பள்ளி மாணவர்களுக்குக் கூட கிட்டாத அரிய நல்வாய்ப்பு அருப்புக்கோட்டை மாணவர்களுக்கு இன்று வாய்த்தது.

அமெரிக்க விண்வெளி நிலையமான நாசாவில் பணிபுரிந்து நான்கு முறை விண்வெளிக்கு சென்று வந்த விண்வெளி வீரர் 
#DON_THOMSON அவர்கள் இன்று(2.9.2019) நமது நகர் SBK கல்லூரிக்கு மாணவர்கள் சந்திப்புக்காக வந்தார்.இந்த நிகழ்ச்சி, GO4GURU என்ற நிறுவனத்தின் முதன்மை நிர்வாகியான நம் மண்ணின் மைந்தர் திரு.காயாம்பு ராமலிங்கம் அவர்களின் முன்னெடுப்போடு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை சேர்ந்த திரு.M.பரமதயாளன் மற்றும் கல்லூரி வேதியியல் துறைத் தலைவர் பேராசிரியர்.T சுப்ரமணியன் அவர்களின் ஒருங்கினைப்போடு SBK கல்லூரி முதல்வர்.முனைவர். N.முத்துசெல்வன்,செயலாளர் திரு.P.சங்கரசேகரன்,
ANUT தலைவர் திரு.M.சுதாகர் அவர்களின் ஆதரவோடு நடந்தேறியது.ஒட்டுமொத்த நிகழ்ச்சியின் பின்புலமாக நின்று திரு.P. போஸ் பாண்டியன் அவர்கள் செயல்பட்டார்.ஏறத்தாழ அறுநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

எங்களதுசெய்திகளைஉடனுக்குடன்உங்கள்மொபைலில்வாட்சப்மூலம்தெரிந்துகொள்ளஉடனே +917010445319 என்றஎண்ணிற்குவாட்சப்மெசேஜ்அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *