கொரோனாவால் கோழிக்கறி விலை வீழ்ச்சி ஆட்டுக்கறி விலை உயர்ந்தது கிலோ ரூ.1,000க்கு விற்பனை!

Share on

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதையடுத்து, உணவு பொருட்களின் விலை, காய்கறிகள் விலை உயரத்தொடங்கி உள்ளது. ஏற்கனவே, கொரோனா, பறவைக்காய்ச்சல் பீதியால் கோழிக்கறி விலை படிப்படியாக குறையத்தொடங்கியது. பல இடங்களில் கிலோ ₹60 முதல் ₹100 வரை விற்பனையாகிறது. விலை குறைந்தபோதும், யாரும் வாங்கத் தயாரில்லை. இதனால் ஆட்டுக்கறிக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று ஒரு கிலோ ஆட்டுக்கறி ₹1,000க்கு விற்கப்பட்டது. இதனால் அசைவப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல ஒரு கிலோ தக்காளி ₹60 முதல் ₹70 வரை விற்கப்பட்டது. இந்த விலை ஏற்றத்தால் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *