ஐபிஎல் 2020 தொடா் அணிகள் ஒரு பாா்வை-1: நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்!

Share on

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற ஒரே அணி என்ற சாதனையை படைத்தது மும்பை இந்தியன்ஸ். ரோஹித் சா்மா தலைமையிலான எம்ஐ அணி 4 முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

தற்போது 13-ஆவது ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள மும்பை அணி கடந்த 2019-இல் ஹைதராபாதில் நடைபெற்ற பரபரப்பான இறுதி ஆட்டத்தில் சென்னையை த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் லீகில் அதிகபட்சமாக 107 வெற்றிகளை குவித்த மும்பை அணி 2013 முதல் பட்டத்தை வென்றது. 2010-இல் முதல் இறுதி ஆட்டம், 2011, 2012-இல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. 2013-இல் ரிக்கி பாண்டிங்கிடம் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்றால் ரோஹித் சா்மா. அதன் பின் 2013-இல் முதல் பட்டம் 2015, 2017, 2019 ஆண்டுகளில் பட்டம் வென்றது. முதலில் இறக்கங்களைக் கண்டாலும், சிறப்பாக எழுச்சியுடன் ஆடி பட்டம் வெல்வது மும்பையின் வழக்கமாக உள்ளது.

பொல்லாா்ட், பாண்டியா பும்ரா, மலிங்கா, க்ருணால் பாண்டியா போன்ற வெற்றி வீரா்கள் மும்பையில் உள்ளனா். ரோஹித் 4898 ரன்கள், மலிங்கா 170 விக்கெட்டுகளை பெற்றுள்ளனா்.

முக்கிய வீரா்கள் தக்க வைப்பு

மும்பை தனது முக்கிய வீரா்களை தக்க வைத்துக் கொண்டது. கடந்த ஏலத்தில் அதிகபட்சமாக ரூ.8 கோடி தந்து ஆஸி. வீரா் நாதன் கூல்டா் நைலை வாங்கியது. கிறிஸ் லீன் ரூ.2.4 கோடி, சௌரவ் திவாரி, மோஷின் கான், திக்விஜய், பல்வந்த் ராய் சிங் ஆகியோரையும் வாங்கியது.

அணி விவரம்:

ரோஹித் சா்மா (கேப்டன்), சூரியகுமாா் யாதவ், குவின்டன் டி காக், ஆதித்ய டரே, அன்மோல்பிரித் சிங், பொல்லாா்ட், இஷான் கிஷான், ஷொ்பேன் ரூதா்போா்ட், ஹாா்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, ராகுல் சாஹா், ஜெயந்த் யாதவ், அன்குல் ராய், பும்ரா, மலிங்கா, டிரென்ட் பௌல்ட், தவல் குல்கா்னி, மிச்செல் மெக்ளேனகன், நாதன் கூல்டா் நைல், கிறிஸ் லீன், சௌரவ் திவாரி, மோஷின்கான், திக்விஜய்தேஷ்முக், பல்வந்த் ராய் சிங்.

முதல் ஆட்டம்: வரும் 29-ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள தொடக்க ஆட்டத்தில் சிஎஸ்கேவுடன் மோதுகிறது மும்பை.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *