வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் எதையும் செய்யவில்லை – பிரதமர் மோடி

மிசோரம்: வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக  காங்கிரஸ் கட்சி எதையும் செய்யவில்லை என்று மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

மிசோரம் மாநில சட்டசபைக்கு வருகிற 28-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மிசோரமில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது.

இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று மிசோரம் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய மோடி “நாட்டை பிரித்தாளும் சூழ்ச்சியை காங்கிரஸ் தொடர்ந்து கையாண்டு வருகிறது. தற்போது அதை மக்கள் புரிந்து கொண்டுவிட்டனர். அதனால்தான் ஒரு காலத்தில் அதிக மாநிலங்களை ஆண்ட காங்கிரஸ் இன்று 2, 3 மாநிலங்களை மட்டும் ஆளும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. தற்போது மிசோரம் மக்களுக்கும் பொன்னான வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. நீங்களும் இங்கிருந்து காங்கிரசை விரட்டி அடியுங்கள்” என்றார்.

மேலும், “கடந்த 4½ ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜனதா வடகிழக்கு மாநில மக்களின் கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் பரந்த, விரிந்த நோக்குடன் செயல்பட்டு வருகிறது. ஆனால் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கோ, கலாசாரத்துக்கோ எதையும் செய்யவில்லை“ என்று குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *