திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலை கண்டு பயப்படுவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்துள்ளார்.

Share on

மதுரை விமான நிலையத்தில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராக இல்லையென்றும், இதனால் தாம் வழக்குப்போடுவதுடன், கூட்டணி கட்சிகளையும் தூண்டிவிட்டு வழக்கு போட்டு வருகிறது என்றும் குற்றம்சாட்டினார். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வரும் திட்டங்களால் மக்கள் மத்தியில் அதிமுகவுக்கு ஆதரவு அதிகரித்து விட்டதாகவும் செல்லூர் ராஜூ குறிப்பிட்டார். மதிமுக பொது செயலாளர் வைகோவை ஆளுமைமிக்க தலைவர் என்ற அமைச்சர், திமுகவில் இணைந்து வைகோ தமது காரியத்தை சாதித்து வருவதாகவும் கூறினார்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *