Shruthi arjun

நடிகர் அர்ஜூன் எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார் – பிரபல நடிகை புகார்

சென்னை: படப்பிடிப்பின் போது நடிகர் அர்ஜூன் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக நடிக ஸ்ருதி ஹரிஹரன் புகார் தெரிவித்துள்ளார்.

மீ டூ ஹேஷ்டேக் மூலம் பல்வேறு பெண்கள் சமூக வலைதளங்களில் பாலியல் புகார்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு படப்பிடிப்பின் போது, நடிகர் அர்ஜூன் தனக்கு செக்ஸ் டார்ச்சர் அளித்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் புகார் தெரிவித்திருக்கிறார்.படப்பிடிப்பின் போது தன்னை இறுக்கி அணைத்துக் கொண்ட அவர், படப்பிடிப்பு முடிந்த பின்னர் அவரது அறைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டியிருக்கிறார். நிபுணன் படத்தில் அர்ஜூன், ஸ்ருதி ஹரிஹரன் ஒன்றாக நடித்திருந்தனர்.

Arjun

ஆனால், இதற்கு பதிலளித்துள்ள நடிகர் அர்ஜூன், இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. இதனை கேட்பதற்கே அதிர்ச்சியாக இருக்கிறுது. திரைப்படத்துறையில் நீண்டகாலமாக இருந்து வரும் நான், இதுவரை 60-70 கதாநாயகிகளுடன் நடித்திருக்கிறேன். ஆனால், எந்த ஒரு குற்றச்சாட்டும் என் மீது கிடையாது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *