https://www.mrchenews.com/wp-content/uploads/2020/07/madurai-1.jpg

மதுரை கிளை உயர்நீதி மன்றம் அறிவிப்பு :அரசு தரப்பில் பாராசிட்டமால் மாத்திரைகளை வழங்கக் கூடாது என்பது போன்ற உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை!!

Share on

மதுரை: அரசு தரப்பில் பாராசிட்டமால் மாத்திரைகளை வழங்கக் கூடாது என்று உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என அரசு தரப்பில் தகவல் தெரிவித்ததை அடுத்து பாரசிட்டமால் மாத்திரைகளை மருந்தகங்களில் வழங்கவும், எவ்வித தட்டுப்பாடுமின்றி பாரசிட்டமால் மாத்திரைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை முடித்து வைத்தது மதுரைக்கிளை.

மதுரையைச் சேர்ந்த ஜோயல் சுகுமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,” மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களின் விதிப்படி, பொருட்களை  வீட்டு உபயோகத்திற்காக வாங்கி வைக்கலாம்.  பாரசிட்டமால் மாத்திரையும் அதன் கீழேயே வருகிறது. ஆகவே மருத்துவர்களின் பரிந்துரை இன்றி அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். பாராசிட்டமால் வலி நிவாரணியாகவும், அதிகபட்ச காய்ச்சலை குறைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மருந்தகங்களில் பாரசிடமோல் மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரை இன்றி விற்பனை செய்யக்கூடாது என வாய்மொழியாக அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும் அதனை மீறி விற்பனை செய்தால் அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர். இதன் காரணமாக ச பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அவர்களை தனிமைப்படுத்துதல் முகாமிற்கு அழைத்துச் செல்வதால், முறையான மருத்துவ வசதி தேவைப்படும் கோரோனா நோயாளிகளுக்கு, தேவையான படுக்கை உள்ளிட்ட வசதிகள் கிடைப்பதில்லை. ஆகவே பாரசிட்டமால் மாத்திரைகள் மருந்தகங்களில் வழங்கவும், எவ்வித தட்டுப்பாடுமின்றி பாரசிட்டமால் கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, “அரசு தரப்பில் பாராசிட்டமால் மாத்திரைகளை வழங்கக் கூடாது என்பது போன்ற உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை” என தெரிவித்தார் இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

MrChe #மிஸ்டர்சே

மதுரை மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள

Whatsapp Link – https://chat.whatsapp.com/LFw9LzfqiGt7ojjMd3TyK1

Facebook Link- https://www.facebook.com/groups/MaduraiNews


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *