மெட்ராஸ் உயர்நீதிமன்ற பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என அறிவிக்க வேண்டும்!!

Share on

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என இருக்கும் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் மதிமுக பொது செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் பெயரிலேயே உயர்நீதிமன்றங்கள் இருப்பதை சுட்டிக்காட்டி, மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என அறிவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் இன்று பேசியபோது வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இதேபோல் மாநில உயர்நீதிமன்றங்களில் ஆங்கிலத்தோடு சேர்த்து, அந்தந்த மாநில மொழிகளையும் வழக்காடு மொழிகளாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியதாகவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *