மீண்டும் அஜித் பட நடிகையுடன் இணையும் மாதவன்!

Share on

மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ’சார்லி’. துல்கர் சல்மான் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பார்வதியும் நடித்திருந்தனர். இந்த படத்தை மார்ட்டின் பர்கத் என்பவர் இயக்கி இருந்தார்.

இந்த படம் பல்வேறு விருதுகளையும் வாங்கியது. 

இந்நிலையில், இந்த படம் தமிழில் மாறா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் திலீப் குமார் என்பவர் இயக்க உள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மான் வேடத்தில் மாதவன் நடிக்கிறார். பார்வதி வேடத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க உள்ளார். மாதவனும், ஷ்ரத்தாவும் ஏற்கனவே விக்ரம்-வேதா படத்தில் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *