குறும்பு தாதா ‘மாரி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

சென்னை: தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி’ படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிடப்பட்டது. முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகனே இரண்டாவது பாகத்தையும் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டு, அதன் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வந்தது. மாரி -2 படத்தில் காஜல் அகர்வாலுக்குப் பதிலாக சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். இவரைத்தவிர வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *