ரஜினி-யின் ‘2.0’ வீடியோ பாடல்கள் வெளியீடு

ரஜினிகாந்த்-ன் ‘2.0’ பாடல் வரிகளுடன் கூடிய வீடியோ வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் – ஷங்கர் கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகிறது ‘2.0’ திரைப்படம். வரும் நவம்பர் 29ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்களுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான ராஜாளி மற்றும் எந்திரலோகத்து சுந்தரியே ஆகிய பாடல்கள் ஹிட் அடித்துள்ளது. இந்த நிலையில், பாடல் வரிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எந்திர லோகத்து சுந்தரியே பாடல்

ராஜாலி பாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *