தர்பார் படத்தின் நான்கு நாள் வசூலை அதிகாரபூர்வமாக வெளியிட்டது லைகா நிறுவனம்!

Share on

தர்பார் படத்தின் முதல் நான்கு நாள் வசூலை அதிகாரபூர்வமாக அறிவித்தது லைகா நிறுவனம்.

ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன். இசை – அனிருத். தயாரிப்பு – லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் கடந்த வியாழன் அன்று வெளியானது.

இந்நிலையில் தர்பார் படத்தின் வசூல் விவரங்களை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. முதல் நான்கு நாள்களில் தர்பார் படம் ரூ. 150 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக வெளியான போஸ்டரில், யார் வேண்டுமானாலும் விளையாட்டில் ஈடுபடலாம். ஆனால் சிம்மாசனம் மாமன்னருக்கே உரியது என்கிற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. 

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *