https://www.mrchenews.com/wp-content/uploads/2020/06/THANJAI_2.jpg

கொரோனா நிவாரணம் உடனே வழங்க கோரி இடதுசாரி கட்சிகள் 20 இடங்களில் ஆர்ப்பாட்டம்!

Share on

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் 20 இடங்களில் கொரோனா நிவாரணம் உடனே வழங்க கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஆர்.செந்தில்குமார், துணைச்செயலாளர் எஸ்.எம்.குருமூர்த்தி, பொருளாளர் ப.தாமரைச்செல்வி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.ராஜாராமன், எஸ்.உத்திராபதி, கோ.பழனிசாமி, கோ.கண்ணன், ஆர்.செல்வம், கே.கே.சேகர், எஸ்.பி.சோமு, கே.லெட்சுமணன், கோ.நாகராஜன், த.ராமலிங்கம், பி.கோதண்டபாணி, மாதர்சங்க தலைவர்கள் க.காமாட்சி, எஸ்.லதா, கே.சாந்தி, எஸ்.செல்வி, எஸ்.வேம்பு மற்றும் முன்னணி ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூறுநாள் பணியாளர்களின் பணியின் நாட்களை 200 நாளாக அறிவித்திடவேண்டும். கொரோனா நிவாரணமாக மத்திய அரசு 7,500 ரூபாயும் மாநில அரசு 5,000 ரூபாயும் அனைவருக்கும் வழங்க வேண்டும், கூட்டுறவு அங்காடியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி மற்றும் பருப்பு ஆயில் உள்ளிட்டவற்றை சரியான எடையுடன் வழங்கவேண்டும்.

குழு கடன்கள்களை தவனை செலுத்துதளை 6 மாதத்திற்கு தள்ளுபடி செய்திட வேண்டும் என பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள

Whatsapp Link- https://chat.whatsapp.com/H5EtQ8RdkDR6rDO9MCwfy3

Facebook Link – https://www.facebook.com/groups/ThanjavurNews/

MrChe #மிஸ்டர்சே


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *