https://www.mrchenews.com/wp-content/uploads/2020/06/Untitled-1-copy-1024x768.png

கும்பகோணம் அதிர்ச்சி: கொலை வழக்கில் விடுதலையானவர்; மனைவி ,பிள்ளைகள் கண்முன்னே வெட்டிக் கொலை!

Share on

ம்பகோணத்தில் கொலை வழக்கு ஒன்றில் தண்டனை அனுபவித்து நன்னடத்தையின் காரணமாக விடுதலை செய்யப்பட்ட நபர் ஒருவரை மனைவி மற்றும் பிள்ளைகள் கண் முன்னே மர்ம நபர்கள் சிலர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நானும் என் பிள்ளைகளும் வெட்டாதீங்க வெட்டாதீங்க என அவர்கள் காலில் விழுந்து கெஞ்சினோம். அப்படியும் கேட்காத அவர்கள், எங்க கண்முன்னே துடிக்கத் துடிக்க வெட்டிக் கொலை செய்து விட்டனர்’ என்று கதறுகிறார் மனைவி மகாலெட்சுமி

கும்பகோணம் அருகே திருப்பந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி (40) இறைச்சிக் கடை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி வேம்பு என்கிற மகாலெட்சுமி. இவர்களுக்கு தாரணி (14) என்ற மகளும், கோகுல் (13) என்ற மகனும் உள்ளனர். செல்வமணி கொலை வழக்கு ஒன்றில் ஆயுள்தண்டனை கைதியாக சிறையிலிருந்து தண்டனை அனுபவித்து, பின்னர் நன்னடத்தையின் காரணமாக விடுதலையாகி வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில், தனது வீட்டிற்கு அருகில் இருந்த அவரை நேற்று மாலை மர்ம நபர்கள் சிலர் மனைவி மற்றும் பிள்ளைகள் கண் முன்னே கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியில் விசாரித்தோம். “1999ம் ஆண்டு செல்வமணியின் அப்பா நாகராஜ் என்பவரை நொண்டி சந்துரு என்ற நபர் கொலை செய்துவிட்டார். அதன் பின்னர் 2000ம் ஆண்டில் அப்பாவைக் கொலை செய்த நொண்டி சந்துருவைப் பழிக்குப் பழியாக செல்வமணி கொலை செய்துள்ளார். இதற்காக திருச்சி மத்திய சிறையில் ஆயுள் கைதியாக தண்டனை அனுபவித்துள்ளார்.

சிறையில் நன்னடத்தையுடன் நடந்துகொண்டதற்காக தண்டனை காலத்திற்கு முன்னதாக 2018-ம் ஆண்டு விடுதலையாகி வெளியே வந்துள்ளார். பின்னர் எந்தப் பிரச்னைக்கும் செல்லாமல் இறைச்சிக் கடையைக் கவனித்தபடி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வமணி நேற்று மாலை அவர் வீட்டிற்கு அருகே சிலருடன் சேர்ந்து மது குடித்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது

அப்போது செல்வமணி ஒருவரை, “என் முன்னாலேயே தண்ணியடிக்கிறியா?’ எனக் கேட்டு திட்டியதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் அந்த நபர் போய் சிலரை அழைத்து வந்து செல்வமணியை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியுள்ளனர். அப்போது செல்வமணியின் மனைவி மற்றும் பிள்ளைகள், வெட்டாதீங்க எனத் தடுத்தும் கேட்காத அந்த நபர்கள் வெட்டிவிட்டு தப்பியுள்ளனர். பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் பிரச்னைக்காக கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்

செல்வமணியின் மனைவி மகாலெட்சுமி, “நானும் என் பிள்ளைகளும் வெட்டாதீங்க வெட்டாதீங்க என அவர்கள் காலில் விழுந்து கெஞ்சினோம். அப்படியும் கேட்காத அவர்கள் எங்க கண் முன்னே துடிக்கத் துடிக்க வெட்டிக் கொன்று விட்டனர். இதில், என் மகளுக்கும் வெட்டுப் பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்’’ எனக் கதறியது சோகத்தை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள

Whatsapp Link- https://chat.whatsapp.com/H5EtQ8RdkDR6rDO9MCwfy3

Facebook Link – https://www.facebook.com/groups/ThanjavurNews/

MrChe #மிஸ்டர்சே


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *