கோவையில் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டி அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்…

Share on

கோவை மாநகராட்சியின் 100-ஆவது வார்டுக்குள்பட்ட பகுதி கணேசபுரம் ஆகும். இங்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. சுமார் 8 டன் எடை கொண்ட ஒரே கல்லில் கால பைரவர், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் ஆகிய மூன்று மதத்தினரும் வணங்கும் வகையில் நிலா, விநாயகர், சிலுவை ஆகிய குறியீடுகளும் இடம்பெற்றுள்ளது. அந்த கல்லில் ஒரு பக்கம் முழுவதும் ஜெயலலிதாவின் முகம் செதுக்கப்பட்டுள்ளது.

100 ஆண்டுகளுக்கு மேலும் ஜெயலலிதாவின் பெயர் நிலைக்கும் வகையில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளதாக அதிமுகவினர் கூறுகின்றனர். ஜெயலலிதாவின் உருவம் செதுக்கப்பட்ட அப்பக்கத்தில் வேல், மணி மற்றும் அதிமுகவின் இரட்டை இலையும் பொறிக்கப்பட்டு உள்ளது.

இதனுடன் “ஜெயலலிதா அவர்களால் உருவாக்கப்பட்டது” என்ற வாசகமும் அவரது வாழ்ந்த காலமும் இடம்பெற்றுள்ளது. நாங்கள் இருக்கும் வரை எங்களது தெய்வம் என அதிமுகவினர் கூறுகின்றனர். இந்த கோயிலில் தினமும் இருகால பூஜைகள் செய்யப்படுகிறது.

இக்கோயிலுக்கு பொதுமக்களுக்கு வந்து ஜெயலலிதாவின் சிலையை வணங்கி செல்கின்றனர். ஏழைகளின் கண்ணீர் துடைக்க எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்திய ஜெயலலிதாவுக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில் அவருக்கு இக்கோயிலை எழுப்பியதாக மக்கள் கண்ணீர் மல்க கூறுகின்றனர்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *