மீண்டும் மின் உற்பத்தி துவக்கம்

கூடங்குளம் அணுமின் நிலைய 2வது அணு உலையில் மின் உற்பத்தி மீண்டும் துவங்கியது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு மின்நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் தொழில்நுட்ப கோளாறால் பிப்., 8 மாலை முதல் நிறுத்திய மின் உற்பத்தி இன்று அதிகாலை 2-37 மணிக்கு மீண்டும் துவங்கியது. மணிக்கு, ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இந்த அணு உலையில், தற்போது, 350 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இது படிப்படியாக அதிகரிக்கும் என கூடங்குளம் அணு மின்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *