கன்னியாகுமரி மூன்றாம் வகுப்பு படைப்பாளி !

Share on

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்த சரவணமுத்துக்கு இந்திய அறிவியல் ஆராய்ச்சி மையம் சார்பில் ஜனாதிபதி கைகளால் விருது வாங்கி அனைவரையும் ஆச்சரியம் அடைய செய் துள்ளார்…. படுக்கையில் முடங்கிய நோயாளிகளுக்கான படுக்கையில் படுத்தவாறு ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கும் டாய்லெட் பெட்…மூன்றாம் வகுப்பு’ சரவணமுத்துவின் சாதனை….

சரவணமுத்து என்பவர் நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே உள்ள வெல்டிங் ஒர்ஷாபில் வேலைப்பாத்து வருகிறார் இவர் பல வருடங்களாகவே கல்லூரி மாணவர்களுக்கு புராஜெக்ட் செய்ய உதவிகரமாக இருந்து வந்துள்ளார்..இவர் மூலமாக செய்யப்பட்ட மாணவர்களின் புராஜெக்ட் க்கு பாராட்டுகளும் விருதுகளும் கிடைத்துள்ளது.இதை பார்த்து கேட்டு வியந்த மூன்றாம் வகுப்பு வரை படித்த சரவணமுத்து நமது வேலைக்கும் தாறமைக்கும் இவ்வளவு மதிப்பும் மரியாதையும் உள்ள என என்னி தன் திறமையையும் சிந்தனையையும் அதிகப்படித்தி கொண்டார்…அதன் பிறகு பல வித கண்டுப்பிடிப்புகளை விஞ்ஞான ரீதியாகவும் நகர்த்தி உள்ளார்… காற்று மாசு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக (air) பில்டர் கண்டுபிடித்துள்ளார் மற்றும் தேங்காய் நார் உரிக்கும் எந்திரம் போன்ற பயனுள்ள பொருள்களை கண்டுபிடித்து வரும் அசாதாரண மனிதன் சரவணமுத்து அசத்தி வருகிறார்.

படுக்கையில் முடங்கிய நோயாளிகளுக்கான டாய்லெட் பெட்…! `மூன்றாம் வகுப்பு’ சரவணமுத்துவின் சாதனை-
“இதைப்பத்தி படிச்சுட்டு உலகம் முழுவதுமிருந்து போன் பண்றாங்க. மூணாங்கிளாஸ் படிச்ச எனக்கு, தமிழ் தவிர வேறு மொழி தெரியாது. அதனால வேறு ஒரு நண்பரின் மொபைல் எண்ணைக் கொடுத்து பேசச் சொல்லுவேன். இதுவரை, உலகம் முழுவதுமிருந்து 675 பேர், `இந்த டாய்லெட் பெட் வேணும்’னு ஆர்டர் கொடுத்திருக்காங்க.”

சரவணமுத்துவின் மனைவி கருப்பை அறுவை சிகிச்சை முடிந்து படுக்கையில் இருந்த காலகட்டம். எழுந்து அமரக்கூட முடியாது. சரவணமுத்துதான் இயற்கை உபாதைகளுக்காக வீட்டுக்கு வெளியே இருக்கும் கழிப்பறைக்குச் சுமந்து செல்வார். ஒவ்வொரு முறையும் இப்படிச் சுமந்து செல்லும்போது, கணவன் படும் சிரமம் கண்டு கலங்குவார் மனைவி. அப்போது, தற்காலிகமாகப் படுக்கையில் வீழ்ந்திருக்கும் தன் மனைவிக்கும் தனக்குமே இத்தனை சிரமங்கள் இருக்கும் என்றால், காலமெல்லாம் படுக்கையிலேயே கிடந்து தவிக்கும் மனிதர்களின் சிரமம் எவ்வளவாக என்று எண்ணி வருந்தினார் சரவணமுத்து. இதற்கொரு தீர்வைக் கண்டுபிடிக்க முயன்றார். அப்போது, அவர் மனதில் உதயமானது டாய்லெட் பெட்.

டாய்லெட் பெட், மிகவும் எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்ட அற்புத சாதனம். இயற்கை உபாதை ஏற்பட்டால் நோயாளி, பெட்டுடன் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு பொத்தானை அழுத்தினால்போதும், பெட்டின் நடுப்பகுதியில் டாய்லெட் கோப்பை வந்துவிடும். இயற்கை உபாதை கழித்த உடன் மற்றொரு பட்டனை அழுத்தினால் தண்ணீர் விட்டு சுத்தமாக்கும். மீண்டும், டாய்லெட் கோப்பை நகர்ந்து, பெட் சாதாரண படுக்கையாக மாறிவிடும். டாய்லெட் பெட், பேட்டரி மூலம் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஒருமுறை பேட்டரியைச் சார்ஜ் செய்தால் ஆறு முறை பயன்படுத்திக்கொள்ளலாம். கழிவுகளை பைப் மூலம் வெளியேற்றவும், சுத்தம் செய்யத் தண்ணீர் செல்லவும் வசதி செய்யப்பட்டிருக்கிறது.

இதைச் செய்த சரவணமுத்து வெறும் மூன்றாம் வகுப்புப் படித்து வெல்டிங் வொர்க் ஷாப்பில் 550 ரூபாய் தினக்கூலிக்கு வேலைபார்ப்பவர்தான். இந்தக் கண்டுபிடிப்புக்காக, அவருக்கு `நேஷனல் இன்னோவேஷன் பவுண்டேஷன் `அமைப்பு, மூன்று லட்ச ரூபாய் பணமும், சான்றிதழும் வழங்கி கௌரவித்திருக்கிறது. கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதியின் கரங்களில் இந்தப் பரிசினைப் பெற்ற சரவணமுத்துவை அவர் வேலைபார்க்கும் வொர்க் ஷாப்பில் சந்தித்துப் பேசினோம்.

“நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே தென்காசி. அப்பா கார் மெக்கானிக்கா இருந்தார். தென்காசி பொன்னம்பலம் அரசுப் பள்ளியில் மூணாங்கிளாஸ் வரைக்கும் படிச்சேன். வறுமை காரணமா நானும் என் அண்ணனும் அப்பா கூட மெக்கானிக் ஷாப்பிற்கு வேலைக்குப் போனோம். நான், கல்யாணம் பண்ணிக்கிட்டு நாகர்கோவில்லையே செட்டில் ஆயிட்டேன். நாகர்கோவிலில் வெல்டிங், லேத் வேலையைக் கையில் எடுத்தேன். இன்னிக்கு வரைக்கும் இந்த வேலைதான் என் குடும்பத்திற்குச் சோறுபோடுது. மனைவி பேரு கிருஷ்ணம்மா. ரெண்டு புள்ளைங்க. மகள் பேரு அகிலா, மகன் பேரு ஆகாஷ்.

எப்பவும் நான் எதாவது யோசிச்சிக்கிட்டே இருப்பேன். ஒருமுறை, என் மனைவியோட பைக்கில் கடை வீதிக்குப் போனேன். கடைல, கரும்பு ஜூஸ் குடிச்சிட்டு, எதையோ யோசித்தபடி, மனைவிகூட வந்ததை மறந்துட்டு வீட்டுக்கு வந்துட்டேன். அவங்க ஆட்டோ பிடிச்சி வீட்டுக்கு வந்தாங்க. இதுபோல பல சம்பவங்கள் நடந்திருக்குங்க.

பள்ளி மாணவர்களுக்கு சின்னச் சின்ன பிராஜெக்ட் ஒர்க்கு செய்துகொடுப்பேன். நான் தயாரிச்சு கொடுத்த பிராஜக்ட்கள் மாணவர்களுக்குத் தேசிய அளவில் பரிசுகளைப் பெற்றுகொடுத்திருக்கிறது. படிப்பறிவு இல்லாததுனால கண்டுபிடிப்பிற்கான மதிப்பு எனக்குத் தெரியாமலே இருந்தது.

2015 ல, என் மனைவிக்கு யூட்ரெஸ் அறுவைசிகிச்சை நடந்தது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு எழுந்து நடக்க முடியாமல், பெட்லயே இருந்தாங்க. நாங்க இருப்பது வாடகை வீடு, வீட்டிற்கு வெளியேதான் டாய்லெட் இருக்கு. இதனால மனைவியை டாய்லெட்டுக்குக் கூட்டிட்டுப் போறது பெரிய வேலையா இருந்துச்சு. தூக்கிட்டுத்தான் போவேன். இதுபோல, எத்தனை பேர் பெட்டிலிருந்து டாய்லெட் போக கஷ்டப்படுகிறார்களோன்னு யோசிச்சேன். அப்போதான் எனக்கு டாய்லெட் பெட் ஐடியா உருவாச்சு.

முதல்ல சின்னதாதான் செஞ்சேன். நண்பர்கள், என் கண்டுபிடிப்பை பேப்பர்ல செய்தியா வரவச்சாங்க. அந்தச் செய்தியைப் பார்த்துட்டு சென்னையிலிருந்து குருமூர்த்தின்னு ஒருத்தர் போன் பண்ணினார். “சென்னையில ஆறு வருஷமா எங்க அம்மா, படுத்த படுக்கையா இருக்காங்க. அவங்களுக்காக ஒரு டாய்லெட் பெட் தயாரிச்சுத் தரமுடியுமா’னு கேட்டுகிட்டார். டாய்லெட் பெட்டுக்கான மாதிரிதான் தயாரிச்சிருக்கேன். இதை நடைமுறையில் செய்யுற அளவிற்கு எனக்கு வசதி இல்லைன்னு சொன்னேன். முழுச் செலவையும் அவரே ஏத்துகிறதா சொன்னார். மகிழ்ச்சியோட வேலையைத் தொடங்கினேன்.

இரண்டரை மாசம் வேலை செஞ்சு, டாய்லெட் பெட்டை தயாரிச்சேன். முதல் ஐந்து முறை செய்த பெட் ஃபெயிலியர் ஆச்சு, ஆறாவது முறைதான் முழுமையடைஞ்சது. ஒரு டாய்லெட் பெட் தயாரிக்க 61,000 ரூபாய் ஆச்சு. அந்தத் தயாரிப்பை அகமதாபாத்தில் உள்ள இந்திய ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பினேன். காப்புரிமை கிடைச்சுச்சு. கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி கையால தேசிய விருதும் கிடைச்சுச்சு.

ஒரு முறை அப்துல்கலாம் அய்யாவோட தெலைபேசியில பேசுற வாய்ப்பு கிடைத்தது. `ஆர்வமா செய்யுங்க’னு ஊக்கப்படுத்தின அவர்தான், `உங்க கண்டுபிடிப்புகளை நேஷனல் இன்னோவேஷன் பவுண்டேஷன் அமைப்பிற்கு அனுப்பி வைய்யுங்க’ னும் சொன்னார்.
தற்போது ஜனாதிபதியிடமிருந்து விருதுபெற்றது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு.

மருத்துவமனைகளில் பயன்படுத்தும் பெட்டை டாய்லெட் பெட்டாக தயாரிக்கும் திட்டத்தை என்னிடம் கொடுத்திருக்காங்க. அதற்கான பணிகள்ல மும்முரமா ஈடுபட்டிருக்கேன். ஏற்கெனவே தயாரித்த பெட்டை ஒயர் இணைப்புள்ள ரிமோட் மூலம் இயக்க முடியும். புதிய பெட்டை வயர்லெஸ் ரிமோட் மூலம் இயக்கும் வகையில் வடிவமைச்சிருக்கேன். 150 அடி சுற்றுவட்டாரத்திலிருந்து இயக்கும் வகையில் ரிமோட் இருக்கும். புதிய டாய்லெட் பெட்டின் விலை, ரூ.69,000 வரை இருக்கும்.

இதைப்பத்தி படிச்சுட்டு உலகம் முழுவதுமிருந்து போன் பண்றாங்க. மூணாங்கிளாஸ் படிச்ச எனக்கு, தமிழ் தவிர வேறு மொழி தெரியாது. அதனால வேறு ஒரு நண்பரின் மொபைல் எண்ணைக் கொடுத்து பேசச் சொல்லுவேன். இதுவரை, உலகம் முழுவதுமிருந்து 675 பேர், `இந்த டாய்லெட் பெட் வேணும்’னு ஆர்டர் கொடுத்திருக்காங்க.

உலக அளவுல, `மூணு கோடியே அறுபத்தஞ்சு லட்சம் பேர் பெட்டில் வாழ்க்கையைக் கடத்துறாங்க’னு கேள்விப்படுறப்போ, நாம வேலை செய்யுற வேகம் பத்தாதுன்னு தோணுது. அதனால, இதைப் பெரிய அளவில் செய்யணும். இதற்காகப் பெரிய நிறுவனத்துடன் இணைந்து செயல்படவும் முடிவு செய்திருக்கேன். எரிபொருளே இல்லாமல் ஓடும் கார் கண்டுபிடிப்பதுதான் எனது வாழ்வின் லட்சியம்” உற்சாகமாகச் சொல்கிறார் சரவணமுத்து!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *