இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமல் மற்றும் இயக்குனர் சங்கருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு!

Share on

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமல் மற்றும் இயக்குனர் சங்கருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் பூந்தமல்லி அடுத்துள்ளது ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் இரவு 9 மணியளவில் இந்தியன் 2 படப்பிடிப்பில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. சண்டை காட்சிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த க்ரேன் சரிந்து விழுந்ததில் 3 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். மேலும் 9 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, லைக்கா நிறுவனம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்த நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் சங்கருக்கு சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக நசரத்பேட்டை காவல்துறையினர் தகவல் தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழ் சினிமா முழுவதுமே மிகப்பெரிய சோகத்தில் ஆழ்ந்தது.

ஏனெனில் இது மிகப்பெரிய திரைப்படம். சங்கர் போன்று மிகப்பெரிய இயக்குனர்கள் இயக்குகின்றனர். இந்த விபத்தானது எதிர்பாராத விதமாக நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கமல் தரப்பில் மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறியிருந்தார். அதேபோல கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கும் சென்ற அவர், செய்தியாளர்களின் சந்திப்பில் அந்த குடும்பங்களுக்கு நிவாரணமும் அறிவித்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே க்ரேன் ஆப்ரேட்டர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, தலைமறைவாக உள்ள க்ரேன் ஆப்ரேட்டரை நசரத்பேட்டை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல் மற்றும் இயக்குனர் சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்புவதற்காக நசரத்பேட்டை காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *