‘குயின்’ ரீமேக் தமிழில்… காஜல் அகர்வால்-ன் ‘பாரிஸ் பாரிஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிக்கும் ‘பாரிஸ் பாரிஸ்’ திரைப்படத்தின ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.

கடந்த 2014-ம் ஆண்டு மார்ச்-ல் விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான படம் ‘குயின்’. ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது இத்திரைப்படம். பெண்களின் சுதந்திரம்,உணர்வுகளை பதிவு செய்துள்ள குயின் திரைப்படமானது, கதாநாயகியை மையமாக கொண்டு உருவானது.

திரைக்கதைக்கு அனைத்து மக்களும் ஆதரவு தருவார்கள் என்பதால், தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தை தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் ரமேஷ் அரவிந்த் ரீமேக் செய்கிறார். தமிழில் உருவாகும் இப்படத்திற்கு “பாரிஸ் பாரிஸ்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழில் காஜல் அகர்வாலும், கன்னடத்தில் பருல் யாதவும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், பாரிஸ் பாரிஸ்-ன் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *