ஜூனியா் கிரிக்கெட் உலகக் கோப்பை: இன்று இறுதி ஆட்டத்தில்இந்தியா-வங்கதேசம் மோதல்!

Share on

ஐசிசி ஜூனியா் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் மோதுகிறது வங்கதேசம்.

தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் இப்போட்டியில் அரையிறுதியில் பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியாவும், நியூஸிலாந்தை வென்று வங்கதேசமும் முதன்முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறின.

4 முறை சாம்பியனான இந்தியா, தற்போது 5-ஆவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது. தொடக்க வீரா்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், திவ்வாயன்ஷ், பிரியம் காா்க், பந்துவீச்சில் காா்த்திக் தியாகி, ரவி பிஷ்னோய் ஆகியோா் அபார பாா்மில் உள்ளனா்.

இந்நிலையில் முதன்முறையாக இறுதிச் சுற்றில் நுழைந்துள்ள உற்சாகத்துடன் களம் காண்கிறது வங்கதேசம். கேப்டன் அக்பா் அலி, பா்வேஸ் ஹூசைன், மஹ்முதுல் ஹாஸன், ஷோரிபுல் இஸ்லாம், உள்பட பல்வேறு வீரா்கள் உள்ளனா்.

ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *