‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்து ஜெயலலிதாவை கொன்றனர் – திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்: சர்க்கரை வியாதியை அதிகரிக்கும் வகையில், எதை உண்ணக்கூடாதோ அவற்றை கொடுத்து ‘ஸ்லோ பாய்சன்’ முறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கொலை செய்துள்ளனர் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் நேற்று நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் சீனிவாசன் திமுக, அதிமுக என பாகுபாடு பார்க்காமல் அனைத்து தொகுதிகளிலும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தனக்கு ஒரு கண் போனால் எதிரிக்கு இரண்டு கண்களும்  போகவேண்டும் என்று நினைப்பவர் தினகரன். ஜெயலலிதா இருந்தபோது அவருக்கு சசிகலா துணையாக இருந்ததை வைத்துக்கொண்டு எல்லோரையும் மிரட்டிக்கொண்டு இருப்பதைப்போல் தற்போதும் இருக்கலாம் என பார்க்கின்றார்.

இந்த ஆட்சி, கட்சியை எப்படியாவது ஒழிக்கவேண்டும் என ஸ்டாலினுடன் கூட்டணி சேர்ந்து முயற்சிக்கிறார் தினகரன். சர்க்கரை வியாதியை அதிகரிக்க, எதை உண்ணக்கூடாதோ அவற்றை கொடுத்து ‘ஸ்லோ பாய்சன்’ செய்து ஜெயலலிதாவை கொலை செய்தவர்கள்தான் தினகரன் குடும்பத்தினர். ஆனால் இன்று உத்தமர்களைப்போல அவர்தான் ஜெயலலிதாவின் வாரிசு என்பதுபோல் பேசுகிறார் என்றார். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், உதயகுமார் எம்.பி. ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *