ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு-கேரளா ஆட்டம் ‘டிரா’

Share on

10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூருவில் நேற்றிரவு நடந்த பெங்களூரு எப்.சி.- கேரளா பிளாஸ்டர்ஸ் இடையிலான பரபரப்பான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. முதல் பாதியில் பெங்களூரு அணி 0-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கிய நிலையில் பிற்பாதியில் உதன்டாசிங் (69-வது நிமிடம்), கேப்டன் சுனில் சேத்ரி (85-வது நிமிடம்) ஆகியோர் அடித்த கோலால் ஆட்டம் சமனுக்கு வந்தது. 14-வது லீக்கில் ஆடிய பெங்களூரு அணி 9 வெற்றி, 4 டிரா, ஒரு தோல்வி என்று 31 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்று நடக்கும் 71-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)- டெல்லி டைனமோஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *