டெல்ட்டா மாவட்டங்களில் 76 சதவிகித தூர்வாரும் பணிகள் நிறைவு – ஆய்வுக்கு பின் நதிகள் மறுசீரமைப்பு கழகத் தலைவர் சத்யகோபால் பேட்டி!

Share on

டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக மேட்டூர் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் 64 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

தூர்வாரும் பணியினை தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் நதிகள் மறுசீரமைப்பு கழகத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான சத்யகோபால் தஞ்சை களிமேடு பகுதியில் முதலைமுத்துவாரியில் நடைபெறும் குடிமராமத்து பணியினை ஆய்வு செய்தார். ஆய்வின் போது டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 3460 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 360 பணிகள் 64 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது 2289 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணி நடைபெற்றுள்ளது. இதில் தஞ்சையில் மட்டும் 945 கிமீ பணியில் 720 கிமீ வரை தூர்வாரும் பணி நிறைவடைந்துள்ளது.

இதுவரை 76 சதவீதம் பணிகள் நிறைவடைந்து உள்ளதாகவும், கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர் மேலும் ஆய்விற்கு ஹெலிகேம் பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

*மாவட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள*

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews/


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *