சர்வதேச குத்துச்சண்டை இந்திய வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்றனர்.

ஸ்ட்ரான்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவில் உள்ள சோபியா நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 51 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை நிக்ஹாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஐரிஷ் மாக்னோவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 54 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீனாகுமாரி தேவி 3-2 என்ற கணக்கில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை அய்ரா வில்லிகாஸ்சை சாய்த்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 48 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி 2-3 என்ற கணக்கில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஜோசி காபுகோவிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *