நியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று தேர்வு -ஹர்திக் பாண்டியா தேர்வாக வாய்ப்பு!

Share on

நியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்படவுள்ளது.

இலங்கை போட்டித் தொடருக்கு பின், ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா விளையாடுகிறது. இதையடுத்து 20ம் தேதி நியூசிலாந்து பயணிக்கும் இந்திய அணி, அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிராக 5 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.

இந்த 3 போட்டித் தொடர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணி, மும்பையில் இன்று தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படவுள்ளது. காயம் காரணமாக நீண்டநாள்களாக ஓய்வில் இருந்து வரும் அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா, 20 ஓவர் போட்டி தொடருக்கான அணிக்கு தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *