இந்தியா தொடரை கைப்பற்றுமா விராட் ஹோலி படை ! ஆட்டத்தில் பேட்டிங் தேர்வு !

Share on

உலகக் கோப்பை தொடரில் சவுத்ஹாம்ப்டன் நகரில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இல்லை. அவருக்குப் பதிலாக முகமது ஷமி இடம் பெற்றுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி கடந்த போட்டியில் இங்கிலாந்திற்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்தப் போட்டியில் ரஷித் கான் பந்துவீச்சை இங்கிலாந்து அணியினர் சிதறடித்தனர். ரஷித் கான் அந்தப் போட்டியில் 110 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதனையடுத்து அவர் மீது அதிக விமர்சனங்கள் எழுந்தன. எனவே இன்றைய போட்டியில் அவர் சிறப்பாக பந்துவீச முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவின் 50 வது வெற்றியாக இது அமையும். இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 2 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் ஒரு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *