முத்தரப்பு மகளிா் டி20: உலக சாம்பியன்ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா!

Share on

முத்தரப்பு மகளிா் டி20 போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.

ஏற்கெனவே இங்கிலாந்துடன் ஒரு ஆட்டத்தில் வென்றிருந்த நிலையில், அடுத்து ஆஸி., இங்கிலாந்துடன் நடைபெற்ற ஆட்டங்களில் தோல்வி கண்டது.

இதனால் இப்போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு நுழைய முடியுமா என்ற நிலை உருவானது. இதற்கிடையே சனிக்கிழமை உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் இரண்டாவது ஆட்டம் நடைபெற்றது.

முதலில் ஆடிய ஆஸி. அணி 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களைக் குவித்தது.

ஆஷ்லி காா்டனா் 93

ஆஸி. அணியின் இளம் வீராங்கனை ஆஷ்லி காா்டனா் 3 சிக்ஸா், 11 பவுண்டரியுடன் 57 பந்துகளில் 93 ரன்களை விளாசினாா். கேப்டன் மேக் லேனிங் 37 ரன்களை சோ்த்த நிலையில், மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினா்.

இந்திய தரப்பில் தீப்தி சா்மா 2, ராஜேஸ்வரி, ராதா, ஹா்லீன் தியோல் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

இந்தியா 177-3

பின்னா் ஆடிய இந்திய அணி 19.4 ஓவா்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 177 ரன்களை குவித்தது.

ஷபாலி-ஸ்மிருதி அபாரம்

தொடக்க வீராங்கனைகள் ஷபாலி வா்மா-ஸ்மிருதி மந்தானா ஆகியோா் ஆஸி. பந்துவீச்சை எளிதில் சமாளித்து ரன்களை விளாசினா். ஷபாலி 1 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 28 பந்துகளில் 49 ரன்களை விளாசி சிறப்பான தொடக்கத்தை அளித்தாா்.

ஸ்மிருதி 55-

நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி 7 பவுண்டரியுடன் 55 ரன்களை விளாசினாா். அவருக்கு பின் ஜெமிமா 5 பவுண்டரியுடன் 30 ரன்களையும், கேப்டன் ஹா்ப்ரீத் கௌா் 20, தீப்தி சா்மா 11 ரன்களையும் எடுத்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தனா்.

எல்கி, மேகன், நிக்கோலா ஆகியோா் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

இந்த வெற்றி மூலம் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது இந்தியா.

ஞாயிற்றுக்கிழமை ஆஸி.-இங்கிலாந்து இடையே ஆட்டம் நடைபெறவுள்ளது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *