இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 2 வது டி-20 போட்டி மழையால் ரத்து

ஆஸ்திரேலியா: இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 2 வது டி-20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 2 வது டி-20 போட்டி மழை பெய்வதால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்றைய போட்டி இந்தியாவிற்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மழையால் இன்றைய போட்டி கைவிடப்பட்டதால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என ஆஸ்திரேலியா அணி முன்னிலை வகிக்கிறது. வரும் 25-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கும் கடைசிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும் தொடரை கைப்பற்ற முடியாது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *