தர்மபுரியில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு!

Share on

தர்மபுரியில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை சரிந்து வருகின்றன. தமிழகத்தில் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தக்காளி சாகுபடி அதிகளவில் நடந்து வருகின்றன.

இந்த பகுதிகளில் அறுவடை ெசய்யப்படும் தக்காளியை விவசாயிகள் பாலக்கோடு, ராயக்கோட்டை உள்ளிட்ட மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கிருந்து தமிழகத்தில் பல பகுதிகளுக்கு தக்காளி விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

கடந்த இரு மாதமாக தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ள இடங்களில் தக்காளி விளைச்சல் அமோகமாக உள்ளன. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு வழக்கத்தைவிட நூறு சதவீதத்திற்கு மேலாக தக்காளி வரத்து வந்து கொண்டிருக்கின்றன. இந்த வகையில் தர்மபுரி மற்றும் கர்நாடகாவில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து கூடியுள்ளது. இதன் காரணமாக தக்காளி விலையும் சரிந்து வருகிறது.

இது குறித்து சேலம் ஆனந்தா மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஒன்றரை மாதமாக தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு 50 டன் தக்காளி சேலம் மார்க்கெட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன. இங்கு விற்பனைக்கு வரும் தக்காளி மேட்டூர், ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சில்லரை விற்பனைக்கு அனுப்பி வருகிறோம்.

தற்போது 28 கிலோ எடை கொண்ட ஒரு கூடை 150 முதல் ₹200 என விற்பனை செய்யப்படுகிறது. சில்லரையில் ஒரு கிலோ தக்காளி 8 முதல் 12 வரை விற்கப்படுகிறது. இன்னும் இரு மாதத்திற்கு தக்காளி வரத்து ஒரே சீராக இருக்கும். அதுவரை தற்போது விற்கும் விலையில் தான் விற்பனை இருக்கும், என்றனர்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *