புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன்முறையாக செயற்கை முறை கருவூட்டல் சிறப்பு முகாம் துவக்க விழா!!!!

Share on

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்டியா நத்தம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையின் தேசிய அளவிலான செயற்கை முறை கருவூட்டல் திட்டம்(NAIP) கட்டம்-2 ன் செயற்கை முறை கருவூட்டல் திட்ட முகாம் மாவட்டத்தின் முதன்முறையாக தொடக்கவிழா கண்டியாநத்தம் கிராமத்தில் நடைபெற்றது. கால்நடை மண்டல இணை இயக்குனர் எஸ் இளங்கோவன் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

விழாவிற்கு உதவி இயக்குனர் ஐ பாண்டி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை உதவி மருத்துவர்கள் ஆலவயல் கே ராஜசேகர் வேந்தன்பட்டி சண்முகநாதன் நகரப்பட்டி சிவகுமார் காரையூர் கால்நடை ஆய்வாளர் தயானந்த ராவ் ஆகியோர் கலந்துகொண்டு கால்நடைகளுக்கு நாட்டின மற்றும் கலப்பின பசுக்களுக்கு இலவசமாக நாட்டின மற்றும் உயர் ரக கலப்பின பொலிகாளைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட உறைவிந்து மூலம் மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்யப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் பிறக்கும் கிடேரி கன்றுகள் தாய்ப் பசுவை காட்டிலும் 50 சதவீதம் கூடுதலாக பால் கறக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் வந்திருந்த மாடுகளுக்கு தாது உப்பு கலவை மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு மாடு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் வந்திருந்த கால்நடைகள் பதிவு செய்யப்பட்டு காது வில்லை அணிவிக்கப்பட்டு கால்நடை நல அட்டைகள் வழங்கப்பட்டது.

இம்முகாமில் சுற்று வட்டார பகுதிகளான ஆலவயல் கண்டியாநத்தம், கேசராபட்டி புதுப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பயன்பெற்றனர்.இந்நிகழ்வில் கால்நடை உதவியாளர்கள் சாந்தி சோலைமணி வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலாளர் அழகப்பன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்

MrChe #மிஸ்டர்சே

புதுக்கோட்டை மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள

Whatsapp Linkhttps://chat.whatsapp.com/Jh0JVlggmPUJtZNvjbJu8H

Facebook Link https://www.facebook.com/groups/PudukaiNews/

Twitter Linkhttps://twitter.com/PudukaiNews?s=08


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *