திருப்பூரில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டதுடன்,சாலையில் படுத்து மறியல்!

Share on

திருப்பூரில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டதுடன், சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது பொதுமக்களில் சிலர் அவருக்கு ஆதரவாகவும் சிலர் அவருக்கு எதிராகவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாகன சோதனையின் போது தன் மீது ஒரு வாகன ஓட்டி இடிக்க வந்ததாகவும், அதை போலீசார் கண்டுகொள்ளவில்லை என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்ட அவர், சிறிது நேரம் கழித்து வாகனங்களுக்கு வழிவிட்டுவிட்டு நடுரோட்டில் அமர்ந்து கொண்டார்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *