அதிகாலையிலிருந்தே நியாய விலை கடை முன்பு அத்தியாவசிய பொருட்கள் வாங்க பை வைத்து இடம்பிடிக்கும் கிராமமக்கள்.

Share on

அதிகாலையிலிருந்தே நியாய விலை கடை முன்பு அத்தியாவசிய பொருட்கள் வாங்க பை வைத்து இடம்பிடிக்கும் கிராமமக்கள்

அயோத்தியாப்பட்டணம் :சேலம் மாவட்டம் கூட்டாத்துப்பட்டி அருகே சந்திரபிள்ளைவலசில் பணியாளர்கள் தாமதமாக வருவதாலும் ,நியாய விலை கடைபொருள்கள் அனைவருக்கும் சரியாக கிடைக்க படாததாலும் மற்றும் குறைந்த நாட்களே நியாய விலை கடை திறக்கப்படுவதால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க இடம் பிடிக்கும் நிலை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையால் அன்றாடம் வேலைக்குச் செல்வோரும்,முதியோர்களும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மிகவும் அவதிப்படுகின்றனர். இம்முறையில் இடம் பிடிப்பதால் பொதுமக்கள் அவர்களுக்குள்ளே தகராறு ஏற்படும் நிலை ஏற்படுகிறது .இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

எங்களதுசெய்திகளைஉடனுக்குடன்உங்கள்மொபைலில்வாட்சப்மூலம்தெரிந்துகொள்ளஉடனே +917010445319 என்றஎண்ணிற்குவாட்சப்மெசேஜ்அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *