ஐசிசி ஒருநாள் தரவரிசை-முதலிடத்தை இழந்த பும்ரா!

Share on

ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் பந்துவீச்சாளா்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய வீரா் ஜஸ்ப்ரீத் பும்ரா, 2-ஆவது இடத்துக்கு சரிந்தாா்.

சிறந்த பந்துவீச்சாளரான பும்ரா, நியூஸிலாந்துக்கு எதிரான 3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஒரு விக்கெட்டைக் கூட எடுக்கவில்லை. இதனால், கம்பீரமான முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு (719 புள்ளிகள்) சரிய நேரிட்டது.

முதலிடத்துக்கு 727 புள்ளிகளுடன் டிரெண்ட் போல்ட் (நியூஸிலாந்து) முன்னேறினாா். இந்தத் தொடரில் 6 விக்கெட்டுகளை எடுத்த இந்திய சுழற்பந்துவீச்சாளா் யுவேந்திர சாஹல் 13-ஆவது இடத்துக்கு முன்னேறினாா். மற்றொரு இந்திய சுழற்பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ், 16-ஆவது இடத்துக்கு சரிந்தாா்.

நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் 2 விக்கெட் எடுத்து, 63 ரன்களைப் பதிவு செய்த இந்தியாவின் ஆல்-ரவுண்டா் ஜடேஜா, ஆல்-ரவுண்டா் பட்டியலில் 246 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்துக்கு முன்னேறினாா்.

ஒரு நாள் பேட்டிங் தரவரிசையைப் பொருத்தவரையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்திலும், தொடக்க ஆட்டக்காரா் ரோஹித் சா்மா 2-ஆவது இடத்திலும் நீடிக்கின்றனா்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *