தமிழகத்தில் ரூ.4,929 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்கள் நிறுத்தம்!!

Share on

தமிழகத்தில் 4 ஆயிரத்து 929 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி விழுப்புரம் – புதுச்சேரி , புதுச்சேரி – பூண்டியங்குப்பம், பூண்டியங்குப்பம் – சட்டநாதபுரம் மற்றும் விழுப்புரம் – நாகப்பட்டிணம் ஆகிய 4 நெடுஞ்சாலை திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன.

மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜானா திட்டத்தின் கீழ் வரும் விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையிலான 180 கிலோ மீட்டர் நீளமுள்ள 4 வழிச்சாலை திட்டத்தால், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி மற்றும் காரைக்கால் இடையேயான பயண தூரம் குறைவதோடு, தொழில் வளர்ச்சியும் மேம்படும்.

இந்நிலையில் இந்த சாலை திட்டங்களை நெடுஞ்சாலை ஆணையம் ரத்து செய்துள்ளது. நெடுஞ்சாலை பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவது தாமதாவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *