விற்பனைக்கு வரும் போகோ எக்ஸ் 2வின் சிறப்பம்சங்கள்!

Share on

போகோ நிறுவனம் போகோ எக்ஸ் 2 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. போகோ எக்ஸ் 2 குவால்காமின் ஸ்னாப்டிராகன் 730ஜி , 4,500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் இரட்டை செல்பி கேமராக்கள் போன்ற அம்சங்களுடன் வருகிறது. இது 64 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 686 குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போகோ எக்ஸ் 2, பிளிப்கார்ட் மூலமாக வருகிற பிப்ரவரி 11ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரும்.

போகோ எக்ஸ் 2 மூன்று ஸ்டோரேஜ் வகைகளில் கிடைக்கும். இவை அனைத்துமே ரூ .20,000க்கு கீழ் இருக்கும். ஊதா, சிவப்பு மற்றும் நீலம் ஆகிய மூன்று வண்ணங்களில் வருகிறது. இது போகோ எக்ஸ் தொடரின் முதல் ஸ்மார்ட் போன் ஆகும். 

போகோ எக்ஸ் 2வின் சிறப்பம்சங்கள்: 

6.67 இன்ச் டிஸ்பிளே, 20:9 விகிதம்

ஐ.ஆர். பிளாஸ்டர் மற்றும் பி2ஐ கோட்டிங். 

வைஃபை காலிங் வசதி

கொரில்லா கிளாஸ் 5, ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்

3.5mm ஹெட்போன் ஜேக்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி ப்ராசசர்

4,500 எம்ஏஎச் பேட்டரி

27W பாஸ்ட் சார்ஜிங் 

கேமரா: 64 எம்.பி சோனி சென்சார்,  8 எம்.பி அல்ட்ரா வைடு, 2 எம்.பி சூப்பர் மேக்ரோ மற்றும் 2 எம்.பி போர்டிரெயிட் லென்ஸ்

முன்புறம் 20 எம்.பி + 2 எம்.பி. செல்ஃபி கேமரா

6ஜிபி+64ஜிபி, 6ஜிபி+128ஜிபி, 8ஜிபி+256ஜிபி ஆகிய மூன்று வேரியண்டுகளில் வருகிறது. 

விலை:   6ஜிபி+64ஜிபி – ரூ. 15,999,   6ஜிபி+128ஜிபி – ரூ.16,999, 8ஜிபி+256ஜிபி – ரூ.19,999. பிளிப்கார்ட்டில் பிப்ரவரி 11ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் விற்பனைக்கு வருகிறது. ஐசிஐசிஐ வங்கி இ.எம்.ஐ-க்கு ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

இந்தியாவில் ரூ.18,999 முதல் ரூ. 20,999 வரை விற்கப்படும் என்று தெரிகிறது. 

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *