Rajinikanth comments on sabarimala

சபரிமலை விவகாரம்: நடிகர் ரஜினிகாந்த்தின் பதில் என்ன?

பெண்களுக்கு அனைத்திலும் சம உரிமை வழங்கப்படுவது சரி தான் என்றும், ஆனால் மத ரீதியில் பார்த்தால் காலம் காலமாக கடைபிடிக்கப்படும் ஐதீகத்தையும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் கட்சி ஆரம்பிப்பது குறித்தும், சபரிமலை விவகாரம், சின்மயி-வைரமுத்து விவகாரம் உள்ளிட்டவை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு ரஜினிகாந்த் பதிலளித்து பேசுகையில், பிறந்தநாளில் கட்சி ஆரம்பிக்கப்போவதாக செய்திகள் வெளிவருகிறது. அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.தற்போதைய நிலையில் கட்சி ஆரம்பிப்பதற்கான 90 சதவீத வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.அதற்கான நேரம், காலம் வரும் போது கட்சியை தொடங்குவேன்.

சபரிமலையில் அனைத்து வயதுள்ள பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். பெண்களுக்கு அனைத்திலும் சம உரிமைகள் வழங்கப்படும் என்பது சரியானது தான். ஆனால், மத ரீதியான விஷயங்களில் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு சடங்கு இருக்கும். காலம் காலமாக இருந்து வரும் ஐதீகத்தில் வேறொருவர் தலையிடுவது சரியானதாக இருக்காது என்பது எனது கருத்து.

மீடு (#MeToo) என்பது பெண்களுக்கு சாதமான ஒரு அம்சமாகவே பார்க்கலாம். ஆனால், இதனை பெண்கள் யாரும் தவறான நோக்கத்தில் பயன்படுத்தக்கூடாது. வைரமுத்து தன்மேல் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதோடு, இதில் உண்மை இருந்தால் வழக்கு தொடரலாம் என்று கூயிருந்தார் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.

பேட்ட படத்தின் ஒரு டயலாக் சொல்ல சொன்ன செய்தியாளர்களுக்கு, “பேட்ட பராக்” என்று கூறியபடி நகர்ந்தார் ரஜினிகாந்த்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *