வேகத்தை குறைத்த கஜா புயல்

சென்னை: வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள கஜா புயல் தனது வேகத்தை ஐந்து கிலோ மீட்டர் என குறைத்துக்கொண்டு மெதுவாக நகர்கிறது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில்  உருவாகியுள்ள கஜா புயல் 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் எனவும் கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்றும்  முதலில் கூறப்பட்டது. பின்னர் கடலூருக்கும் – பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் கஜா புயல் 5 கிலோ மீட்டர் என குறைந்த வேகத்தில் நகர்வதாகவும் சென்னைக்கு  கிழக்கே 750 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகைக்கு  வடகிழக்கே 840 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது எனவும் இன்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது . மேற்கு – தென்மேற்கு திசை நோக்கி நகரும் கஜா, 15-ந்தேதி அதிதீவிர புயலாக வலுப்பெற்று பாம்பன் – கடலூர் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *