சுதந்திரத்திற்குப் பின் முதன்முறையாக அரசுப் பேருந்தைக் கண்ட விருதுநகர் கிராமம்!

Share on

சுதந்திரத்திற்குப் பின் முதன்முறையாக அரசுப் பேருந்தைக் கண்ட கிராமம்

நாடு சுதந்திரமடைந்து 73 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக வந்த அரசுப் பேருந்தை பட்டாசு வெடித்தும், இனிப்பும் வழங்கியும் கொண்டாடினர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம மக்கள்.

திருச்சுழி அருகே உள்ள M.மீனாட்சிபுரம் கிராமத்திற்கு பேருந்துகள் வருவதில்லை என்பதால், பேருந்துக்காக 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுவந்தனர். பள்ளிகளுக்குச் மாணவ-மாணவிகளும், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

கிராம மக்கள் மேற்கொண்ட பல கட்ட போராட்டத்திற்கு பின் M. மீனாட்சிபுரம் கிராமத்திற்கு அரசுப் பேருந்து வந்தது. பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் பேருந்தை வரவேற்ற கிராம மக்கள், ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் பொன்னாடை போர்த்தி இனிப்புகளை வழங்கினர்.

எங்களதுசெய்திகளைஉடனுக்குடன்உங்கள்மொபைலில்வாட்சப்மூலம்தெரிந்துகொள்ளஉடனே +917010445319 என்றஎண்ணிற்குவாட்சப்மெசேஜ்அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *