தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு!

Share on

தமிழ் நாடு முழுவதும் அந்த அந்த மாவட்டங்களில் நியாய விலை கடை (ரேசன் கடை) விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்ய படுகிறது.. எனவே அந்த அந்த மாவட்டங்களில் உள்ள மண்டல இணை பதிவாளர் கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து நியாய விலை கடை பணி வாய்ப்பை தவற விடாதீர்கள்

விண்ணப்ப படிவம் உங்கள் மாவட்டத்தில் எங்கு கிடைக்கும், எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.

முழு தகவல் அறிய

https://bit.ly/TNRationShopJobs


I.நிபந்தனைகள்

1.விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், தனித்தனியே அதற்குரிய விண்ணப்பத்தில் விண்ணப்பிக்க வேண்டும் .

2.மேற்படி பதவிக்கு தேர்தெடுக்கபட்ட விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் அரசு உதவி
மருத்துவர் நிலைக்கு குறையாத மருத்துவரிடம் பெற்ற உடற்தகுதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்

3.விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும் அதாவது (01.01.2002 அல்லது அதற்கு முன்னரே பிறந்தவராக இருக்க வேண்டும்

II.கல்வி தகுதிகள்

1. நியாய விலை கடை விற்பனையார்கள் – மேல்நிலை வகுப்பு தேர்ச்சி (+2) அல்லது அதற்கு சமமான கல்வி தகுதி பெற்று இருக்க வேண்டும்

III.தமிழ்மொழித்திறன்

1.விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பு வெளியிடும் நாள் அன்று தமிழ் மொழியில் எழுத , படிக்க போதுமான
திறன் உள்ளவராக இருக்க வேண்டும்

2.நியாய விலை கடை கட்டுனர்கள் – பள்ளி இறுதி வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

IV. காலி பணியிடங்களுக்கான விருப்ப்பந்தெரிவித்தல்

1. விண்ணப்பதாரர்கள் தாங்கள் எந்த நிறுவனத்தின் நியாய விலை கடைக்கு பணியமர்த்த வேண்டும்
என்பதற்கான விருப்பத்தை நேர்முக தேர்வின் பொது தெரிவிக்க வேண்டும் .

2.விண்ணப்பதாரர்களின் விருப்பப்படி அவர்களுக்கான பணியிட ஒதுக்க இயலாத நிலை ஏற்பட்டால்
மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய முடிவின்படி அவர்களுக்கு ஐடா ஒதுக்கீடு வழங்கப்படும்

3.இது தொடர்பாக மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தால் எடுக்கப்படும் முடிவே இறுதியானது

V.விண்ணப்பங்கள் விநியோகித்தல்

1. மேற்படி நியாய விலை கடை மற்றும் கட்டுனர் பணி நியமங்களுக்கான விண்ணப்ப படிவம்
நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை , தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் ,வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகிய அலுவலகத்தில் விண்ணப்பங்கள்
விநியோகிக்க படுகின்றன

2. 18.06.2020 நாள் முதல் வேலை நேரத்தில், வேலை நாட்களில் இலவசமாக பெற்று கொள்ளலாம் .

2. நியாய விலை கடை விற்பனையாளர்கள் நியமனத்திற்கான விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ .150/-

3. நியாய விலை கடை விற்பனை கட்டுனர்கள் நியமனத்திற்கான விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ . 100/-

VI. விண்ணப்ப படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டிய இணைப்புகள்

1. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட அனைத்து சான்றிதழ்களின் நகல்களை மட்டும் இணைத்து
அனுப்ப வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் அசல் சான்றிதழ்களை இணைத்து அனுப்பக் கூடாது

2.சான்றளிக்க பட்ட சான்றிதழ்கள் இணைக்கப்படாமல் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

VII. நேர்முகத்தேர்வு

1.நேர்முக தேர்வுக்கான அழைப்பு கடிதம் விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட தபால் முகவரிக்கு
அனுப்பப்படும்

2. நேர்முக தேர்வுக்கு வருகை தரும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட சான்றிதழ்களின்
அசல் மற்றும் அவற்றின் நகல் ஒன்றுடன் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்

4.நேர்முக தேர்வுக்கு குறித்த நாள் மற்றும் குறித்த நேரத்தில் வருகை புரியாத விண்ணப்பதாரர்கள்
எவ்வித உரிமையும் கோரா இயலாது .

4.நேர்முக தேர்வில் கலந்து கொள்ள பயணப்படி ஏதும் வழங்கபட மாட்டாது.

பூர்த்தி செய்யப்பட விண்ணப்பங்களை பெறுதல்

1.விண்ணப்ப படிவங்கள் நீலம் அல்லது பந்து முனை பேனா() கொண்டு பூர்த்தி செய்ய பட வேண்டும்
கையொப்பத்திற்காக ஒதுக்கபட்ட இடத்தில் கட்டாயம் கையொப்பம் இட வேண்டும்.

2.விண்ணப்ப படிவத்தில் அணைத்து கலங்களும் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட விவரங்களின் அடிப்படையில் முழுமையாக செய்யபட வேண்டும் .

3.ஆதி திராவிட ,ஆதி திராவிட அருந்ததியர் மற்றும் அனைத்து வகுப்பினர் மாற்றுதிறனாளிகள் இந்த
பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை.

4.விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டுவதுடன் தனியாக ஒரு புகைப்படம் இணைக்க பட வேண்டும்.

5.நேர்முக தேர்வு அழைப்பாணையை அனுப்புவதற்கு ஏதுவாக சுய முகவரியிட்ட உரையில் ரூபாய் 25/-க்கான
தபால் வில்லை ஒட்டிய உரையினையும் விண்ணப்பத்தையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

6.பூர்த்தி செய்யப்ப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலம் ஆள் சேர்ப்பு நிலையம், அந்ததந்த மாவட்டங்களின் குறிப்பிடப்பட்ட கூட்டுறவு சங்க மொத்த விற்பனையாளர்கள் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க பட வேண்டும்.

7.கடைசி நாள் மாலை வரை தபால் மூலமும் ,நேரிலும் சமர்ப்பிக்கலாம் .

VIII. மாவட்ட வாரியாக விவரங்கள்

மேலும் மாவட்டங்களுக்கு


https://bit.ly/TNRationShopJobs

எங்களது செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Linkhttps://www.facebook.com/groups/Mr.CheNews/


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *