மதுரை மாவட்டம் மறவன்குளம் கண்மாயில், பனைவிதைகள் விதைக்கும் களப்பணி இன்று நடைபெற்றது!

“வளமான சமுதாயம்” அமைந்திட சித்தர்கூடம் திருமங்கலம் களப்பணி நண்பர்களின் பாரம்பரிய பனைவிதைகள் விதைக்கும் களப்பணி இன்று (8/10/2019) மறவன்குளம் கண்மாய்கரையில் நடைபெற்றது.

இக்களப்பணியில் சித்தர்கூடம் ” பசுமையை உருவாக்குவோம் ” பயற்சி மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் பனை விதைகளை நட்டனர்.

சித்தர்கூடம் திருமங்கலம் களப்பணி நண்பர்கள்,
இயற்கை ஆர்வலர்கள் சகோதரர் அசோக், கார்த்திக் மற்றும்
சகோதரி செல்வராணி அவர்கள் பனைவிதைகள் நடும் களப்பணியில் கலந்துக்கொண்டனர்.

நமது களப்பணிக்காக பனைவிதைகள் வழங்கிய சகோதரி செல்வராணி அவர்களுக்கு சித்தர்கூடம் திருமங்கலம் களப்பணி நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வாரந்தோறும் ஞாயிறன்று நடைபெறும் களப்பணிகளில்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை (ஆண்கள்+ பெண்கள்)இணைந்து ” வளமான சமுதாயம்” அமைந்திட முயற்சி எடுப்போம்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *