https://www.mrchenews.com/wp-content/uploads/2020/10/logos-and-water-mark-1.jpg

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கரும்புகளோடு வந்து விவசாயிகள் போராட்டம்!!!

Share on

புதுக்கோட்டை மாவட்டத்தில் விளைந்திருக்கக் கூடிய கரும்புகளை அறிஞர் அண்ணா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் கரும்புகளோடு வந்து முற்றுகையிட்டதால் பரபரப்பு.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு விவசாயம் பிரதானமாக உள்ளது. மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு விவசாயம் என்பது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் விளைவிக்கக் கூடிய கரும்புகளை விவசாயிகள் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள இஐடி பாரி தனியார் சர்க்கரை ஆலையில் கொடுப்பார்கள்.


ஆனால் கடந்த 6 மாதத்துக்கு முன்பு தனியார் சர்க்கரை ஆலை மூடப்பட்டு விட்டது. இதனால் கரும்பு கொள்முதல் என்பது இதுவரை நடக்காததால் நன்கு விளைந்திருக்கும் கரும்புகள் நாசமாகி வருகின்றன. எனவே தஞ்சை மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் விளைந்து இருக்கக் கூடிய கரும்புகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.


அவர்களது கோரிக்கையை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்புகளோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனை தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் அவரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். கரும்புடன் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இதனை தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் அவரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். கரும்புடன் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

#MrChe #மிஸ்டர்சே

புதுக்கோட்டை மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள

Whatsapp Linkhttps://chat.whatsapp.com/K1dDDYF3htp6FzYaLaRKNs

Facebook Linkhttps://www.facebook.com/groups/PudukaiNews/

Twitter Link https://twitter.com/PudukaiNews?s=08


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *