பங்குச் சந்தையில் வீழ்ச்சி!!

பாகிஸ்தான் எல்லைக்குள் விமானப்படை நுழைந்து தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் இந்திய பங்குச்சந்தைகளில் பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இரு நாடுகளிடையே போர் பதட்டம் உருவாகியுள்ள நிலையில் இயல்பாகவே இவ்வாறு ரூபாய் மதிப்பு சரிவடைவது வழக்கம்தான். அதுதான் இன்றும் நடந்துள்ளது.

அதேபோல பங்குசந்தையில் பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. முதலீட்டாளர்கள் நடுவே ஏற்பட்டுள்ள பதட்டத்தின் காரணமாக இவ்வாறு பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கிறார்கள். இந்திய ரூபாயின் மதிப்பு 0.5% குறைந்துள்ளது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 71.3125 என்ற அளவில் குறைந்து காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *